அமமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கு:முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது

Author: Udhayakumar Raman
3 September 2021, 5:57 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே ஜூலை மாதம் 13ஆம் தேதி அமமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஞானம் பெற்றான் தங்கள். கிராமத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் கோவிந்தன் என்பவர் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி மர்ம நபர்களால் அவரது விவசாய நிலத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிர படுத்தினர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் முதல் குற்றவாளி சேட்டு என்பவர் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் அவரிடம் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலைக்கு உடந்தையாக இருந்த மணலூர் பேட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜி மற்றும் ராஜாவின் மகன் ராஜி என்பவரை மணலூர்பேட்டை போலீசார் நேற்று இரவு பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சேட்டுடன் இருவரும் இணைந்து தான் கொலை கோவிந்தன் என்பவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த இருவரையும் கைது செய்த போலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இரண்டு மாதங்கள் கழித்து தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 170

0

0