சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

By: Udayaraman
5 October 2020, 10:04 pm
Quick Share

புதுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நிதிமன்ற தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த 2018 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை கருப்பையா தங்கராஜ் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கருப்பையா தங்கராஜ் மீது போக்சோ சட்டத்தில் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை மகிளா நிதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் பாலியல் வன்கொடுமை செய்தது கருப்பையா தங்கராஜ் தான் உறுதியானது.

இதையடுத்து நீதிபதி சத்தியா இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் பத்தாயிரம் ரூபாயும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த வழக்கை புலன் விசாரணை செய்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர் கவிதாவிற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டி உள்ளார்.

Views: - 37

0

0