சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட அன்பழகன் வலியுறுத்தல்

11 November 2020, 5:54 pm
Pondy Admk -Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனவும், துணை நிலை ஆளுநர் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையீட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், புதுச்சேரியில் கொத்தடிமை தொழிலாளர்கள் விவகாரத்தை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க தவறி விட்டதாக குற்றம்சாட்டிய அன்பழகன், புதுச்சேரியில் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தால் இந்திய அளவில் புதுச்சேரிக்கு தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது என்றும், சிறுமிகள் பாலியல் சம்பவத்திற்கு முதல்வர் நாராயணசாமி பொறுப்பேற்க வேண்டும் எனவும்,

இந்த வழக்கில் முழுமையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாமல் சம்பவத்தை மூடி மறைக்கும் வேலையை முதல்வர் நாராயணசாமி செய்கிறார் என குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுமிகளுக்கும் அரசு அவர்களது எதிர்காலத்திற்காக 50 லட்சம் வழங்க வேண்டும் எனவும் இந்த சம்பவத்தில் துணைநிலை ஆளுநர் நேரடியாக தலையீட்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலுயுறுத்திய அன்பழகன், புதுச்சேரி முழுவதும் கொத்தடிமைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Views: - 27

0

0