சாலை விரிவாக்கப் பணிக்காக பிள்ளையார் கோவிலை அகற்ற கோரிய வழக்கு: தொடர்பான வழக்குகள் உடன் பட்டியலிட உத்தரவு…

1 September 2020, 11:06 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: பழனி ரயில்வே பீடர் சாலை விரிவாக்கப் பணிக்காக பிள்ளையார் கோவிலை அகற்ற கோரிய வழக்கில், இது தொடர்பான வழக்குகள் உடன் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த துளசிதுறை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “பழனி நகர் பகுதியில் சாலைகளை விரிவாக்க பணிகள் நடைபெருக்கிறது. இதில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றமுடிவு செய்து ஆக்கிரமிப்புகாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதன்படி சாலையில் உள்ள பிள்ளையார் கோயிலை அகற்ற நோட்டீஸ் அனுப்பபட்டும் அகற்றவில்லை. தொடர்ந்து பிள்ளையார் கோயிலை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து கோவில் நிர்வாகத்தின் சார்பாக அதிகாரிகளிடம் கால அவகாசம் கோரினர். தொடர்ந்து ரயில்வே பீடர் சாலையில் அதிகமாக ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பழனி ரயில்வே பீடர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வழக்குகள் உடன் பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணை செப்டம்பர் 3ஆம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Views: - 0

0

0