வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியவர் மீது வழக்குகள் பதிவு: மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல்
27 February 2021, 6:17 pmநீலகிரி: நீலகிரியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய ஆளுங்கட்சி மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார் .
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து இன்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாதேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், நேற்று மாலை 5 மணிக்கு மேல்தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு கூடலூரில் 3.30 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்களும்,
உதகை மற்றும் கோத்தகிரியில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான புடவைகள், வேட்டி, தட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு ஆளுங்கட்சி மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சமூக வலைதளங்கள் தேர்தல் குறித்து அவதூறு மற்றும் பொய் தகவல்களை பரப்பும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0
0