மாடுகளை கடத்தி வந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட்டம்: கறவை மாடுகளை கைப்பற்றி கோசாலையில் ஒப்படைப்பு

23 June 2021, 4:34 pm
Quick Share

திருவள்ளூர்: திருத்தணி அருகே வேனில் கடத்தி வந்த 7 கறவை மாடுகளை போலீசார் கைப்பற்றி கோசாலையில் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் வாகன சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காட்பாடி பகுதியிலிருந்து ராஜஸ்தான் பதிவெண் கொண்ட மகேந்திரா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது காவல்துறையினர் வேனை மடக்கி சோதனை செய்வதற்காக ஆயத்தமான நிலையில் வேனை 100 அடி தூரத்தில் நிறுத்தி விட்டு வேனில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அந்த வேனில் ஏழு கரவை மாடுகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக அந்த கறவை மாடுகளை பாலாபுரம் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சோதனை செய்து அதன்பிறகு திருவாலங்காட்டில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் கோசாலை மையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்தனர். கறவை மாடுகளை எங்கிருந்து கடத்தி வருகிறார்கள் காவல்துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தவர்கள் யார் என்பது குறித்து ஆர்கே பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 50

0

0