காணாமல் போன சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

Author: kavin kumar
3 November 2021, 12:04 am
Quick Share

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் ரூ.22 லட்சம் மதிப்பிலான 146 செல்போன்களை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் திருடப்பட்ட மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021-ம் வருடத்தில் காவல் நிலையங்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக காவல்துறை தலைவர் மத்திய மண்டலம் மற்றும் தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின்படி திருடப்பட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைவாக கண்டுபிடிக்க தனிக்கவனம் செலுத்திய காவல் துறையினர் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் விரைந்து செயல்பட்டு சுமார் ரூ. 22 லட்சம் மதிப்புடைய 146 சுமார்ட் செல்போன்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட செல்போன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உரியவர்களிடம் செல்போனை வழங்கியும் மேலும் செல்போனை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்தும் மற்றும் தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு வழங்கியும், பண இழப்பு ஏற்படும் சைபர் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக 155 260 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Views: - 213

0

0