சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து!!

2 September 2020, 11:41 am
Quick Share

கன்னியாகுமரி : குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செல்போண் கடையில் சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்ததில் அருகில் இருந்த இளைஞர் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் செல்போண் கடை நடத்தி வருகிறார் நேற்று இவரது கடையில் இவர் செல்போன் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது பக்கத்தில் சார்ஜரில் வைத்திருந்த செல்போண் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீ பற்றியது. இதனால் அதிர்ந்து போன ராஜேஷ் என்ன செய்வது என சிறிது நேரம் அங்குமிங்குமாக ஓடினார்.

கடைசியில் செல்போனில் உள்ள தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். பகல் நேரம் என்பதால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கபட்டது. யாரும் அருகில் இல்லாத போது இந்த விபத்து நடந்திருந்தால் கடை முழுவதும் தீக்கரையாகியுள்ளன.

Views: - 7

0

0