மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அறையில் இருந்து 14 செல்போன்கள் பறிமுதல்

23 October 2020, 3:07 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அறையில் இருந்து 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 14 கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி காலப்பட்டில் உள்ள மத்தியசிறை கண்காணிப்பாளர் கோபிநாத் சிறைக்குள் ரோந்து சென்ற போது கைதிகளிடம் இருந்த 2 செல்போன்கள் மற்றும் பேட்டரி, சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்து காலாபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து காலாபட்டு போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி போலீசார் சிறைக்குள் சென்று கைதிகள் அறையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 செல்போன்கள் பேட்டரி சார்ஜர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்த செல்போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, 6 தண்டனை கைதிகள் மற்றும் 8 விசாரணை கைதிகள் என மொத்தன் 14கைதிகள் மீது காலாபட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Views: - 15

0

0