இருசக்கர வாகனத்தின் மீது சிமெண்ட் லாரி மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

12 June 2021, 5:31 pm
Quick Share

அரியலூர்: உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் சுத்தமல்லி சாலையில் சிமெண்ட் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ஜோதி வீட்டில் சமையல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் இறுகையூர் கிராமத்திலிருந்து சுத்தமல்லி சாலையில் தா.பழூர் நோக்கி தனது மொபட்டில் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கும்பகோணத்தில் சிமெண்ட் லோடு இறக்கிவிட்டு

அரியலூர் நோக்கி சென்ற லாரி மோதியதில் ஜோதி லாரியின் அடியில் சிக்கி கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த தா.பழூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுனர் லாரியை விட்டு விட்டு தப்பிச் சென்ற நிலையில் விபத்து குறித்து தா.பழூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 61

0

0