ரூ.1.03 லட்சம் கோடி செலவில் தமிழகத்தில் சாலைகள் அமைக்கப்படும் : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

1 February 2021, 12:31 pm
Nirmala-Sitharaman - updatenew360
Quick Share

டெல்லி : தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் செலவில் சாலைகள் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம அணுவித்துள்ளார்.

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதும் 13 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, மேலும் 11,500 கி.மீ. தொலைவில் சாலை அமைக்கப்படும். குறிப்பாக, தமிழகத்தில் 35 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு ரூ.1.03 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படும்.

தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் விதமான சாலைகளை விரிவுபடுத்தப்படும். தனியார் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும், வணிக பயன்பாட்டிற்கு இயக்கப்படும் வாகனங்களை 15 ஆண்டுகள் வரையிலும் இயக்க நடவடிக்கை. நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும், எனத் தெரிவித்தார்.

Views: - 0

0

0