திமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

9 May 2021, 10:07 pm
Quick Share

கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வெற்றிக்காக சிறப்பாக செயல்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பதவி ஏற்பு விழா மற்றும் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப் தலமையில் நடைப்பெற்ற இத்த விழாவின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பெறுப்பேற்க வேண்டி தீவிரமாக தேர்தல் பணி ஆற்றி வெற்றிப்றச்செய்த நகர கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மேலும் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலமையில் நல்லாட்சி அமைக்கப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் நடைப்பெற்ற

இந்த விழாவின்போது திமுக வெற்றிக்காக சிறப்பாக இரவுபகல் பாரமால் கழகப் பணி ஆற்றிய 500 நகர கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை நகர திமுக செயலாளர் நவாப் வழங்கி கௌரவித்தார். மேலும் இந்த விழாவின் திமுக மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் பரிதா நவாப், திமுக தலமை கழகப் பேச்சாளர் கனல் சுப்பிரமணியன், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் திருமலைச்செல்வன், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Views: - 32

0

0