கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு சான்று வழங்கி கௌரவிப்பு…
15 August 2020, 2:27 pmஅரியலூர்; 74 ஆவது சுதந்திர தினவிழாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ரத்னா தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ரத்னா மற்றும் மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு காவலர்கள் மரியாதையை ஏற்றுக்கொண்டனர். உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரத்னா மற்றும் மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் ஆகியோர் வெண்புறாக்களை பறக்கவிட்டனர்.
இதனையடுத்து கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு சான்று வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் நிகழ்ச்சியில் பள்ளிமாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு தவிர்க்கப்பட்டது. இதுபோன்று சுதந்திரதினவிழா அன்று நடைபெறும் கிராமசபா கூட்டம் மற்றும் கோவில்களில் நடைபெறும் சமபந்தி ஆகியவற்றிற்கும் அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.