ரவுடி வெட்டிகொலை செய்யப்பட்டு நிலத்தில் புதைப்பு: குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்

18 August 2020, 10:10 pm
Quick Share

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழைய மாம்பாக்கம் தனியார் வீட்டு மனை பகுதியில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு ரத்தம் சிந்திய நிலையில் ஒரு கத்தி மீட்கப்பட்டு மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நான்கு தினங்களுக்கு முன் கொலை நடந்து உள்ளது என்பதை அறிந்த மதுராந்தகம் போலீசார் துப்பு கிடைக்காமல் தேடி வந்த நிலையில், நேற்று இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணை செய்தனர். அதனடிப்படையில் கஞ்சா ஆசாமிகள் உடன் நடந்த தகராறில் சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த டோரி கார்த்தி என்பவரை கை கால்கள் வெட்டி கொலை செய்து முருகம்பாக்கம் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. டோரி கார்த்திக் மீது வழிபறி கொலை கொள்ளை ஆள் கடத்தல் என பீர்க்கங்கரணை, அரும்பாக்கம், அமைந்த கரை, சோழிங்கநல்லூர், மேடவாக்கம் ,சேலையூர், மேல்மருவத்தூர், மதுராந்தகம் உள்பட பல காவல் நிலையங்களில் 22 வழக்குகள் உள்ளது.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கபட்ட கார்த்திக்கிள் சடலத்தை இன்று ADSP பொன்ராம், DSP மகேந்திரன், வட்டாசியர் கனிமொழி ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுத்து பரிசோதனை நடத்தி அங்கேயே புதைக்கப்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக கஞ்சா கும்பலை சேர்ந்த கெண்ரச்சேரி பகுதியைச் சேர்ந்த சபரி என்பவரை மதுராந்தகம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முக்கிய குற்றவாளியான மதுராந்தகம் பகுதியை சேர்ந்த கஞ்சா விற்பனையாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட 3 பேரை மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Views: - 46

0

0