சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது

23 September 2020, 10:52 pm
Quick Share

சென்னை: புளியாந்தோப்பில் கஞ்சா விற்பனை செய்து வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை புளியாந்தோப்பில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் வந்த வண்ணமாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து தனிபடை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும் இன்று காலை அம்பேத்கார் காலேஜ் சாலையில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீஸ்சார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அப்தூல் நாசர், சார்லஸ், தினேஷ்குமார் மற்றும் பிரவின் குமார் என்பது தெரியவந்தது.

மேலும் நான்கு பேரும் சேர்ந்து ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மொத்தமாக கஞ்சா வாங்கிவந்து சிறு சிறு பொட்டலங்களாக தயாரித்து புளியாந்தோப்பு, டிக்காசன் ரோடு, வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலையம் அருகில் இது போல இடங்களில் விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் , அவர்களிடமிருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்