கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு: வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

3 July 2021, 8:31 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி ஆய்வு மேற்கொண்டு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் சஞ்சிப் பானர்ஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கொரோனா காலத்தில் நீதிமன்ற செயல்பாடு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நலன் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். மேலும் ஒருங்கிணைந்த மனு தாக்கல் இ சேவை மையத்தை தலைமை நீதிபதி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி கலைமதி பிற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் குறைந்தளவு மட்டும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

Views: - 120

0

0