பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

By: Udayaraman
9 October 2020, 9:57 pm
Quick Share

சென்னை: பெரம்பூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிlமிருந்த கஞ்சாக்களையும் பறிமுதல் செய்தனர்.

சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்திற்குள் மர்மநபர்கள் 2 பேர் கஞ்சா விற்பதாக செம்பியம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்பேரில் செம்பியம் போலீசார் பெரம்பூர் பேருந்து நிலையம் முழுவதும் சோதனை செய்தனர் இதில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு பேரை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த மதன் வயது 20 என்பதும் மற்றொரு நபர்  வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பிரேம்நாத் வயது 20 என்பதும் தெரிய வந்தது.

இவர்களிடம் நடத்திய சோதனையில் 3 கிலோ கஞ்சா பிடிபட்டது இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று யாரிடமிருந்து கஞ்சா வாங்கினார்கள் என்று தீவிர விசாரணை நடத்தினர் அதன்பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 28

0

0