குடிநீர் இணைப்பு பெற அலைய விடுவதாக கூறி பொதுமக்கள் போராட்டம்

21 September 2020, 7:05 pm
Quick Share

சென்னை: சென்னையில் குடிநீர் இணைப்பு பெற உதவி பொறியாளர் அலைய விடுவதாக கூறி பொதுமக்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாதவரம் மண்டலம் 26 வது வார்டில் சக்திவேல் நகர் பாரதி நகர் சாஸ்திரி மாகாவீர் நகர் உள்ளிட்ட 10த்திற்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டம் முறையாக செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனை தொடர்ந்து சாஸ்திரி நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தூர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுநாள்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாஸ்திரி நகர் பிரதான சாலையில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் அடைப்பை சரி செய்யாத மாதவரம் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 6

0

0