திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு

19 June 2021, 1:56 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி ஆய்வு மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆட்சியில் திறக்கப்பட்ட இணைப்பு கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்ட தலைமை நீதிபதி கழிவறை மற்றும் நீதிமன்ற வளாகத்தை மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்களுடன் ஆய்வு செய்து குடும்ப நல நீதிமன்ற நீதிபதி மற்றும் அலுவலர்களிடம் வழக்குகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். முன்னதாக நீதிமன்ற வளாகத்தை பார்வையிட வந்த தலைமை நீதிபதியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் நீதிமன்ற வளாகத்தில் கட்டிடங்களை தன்மை குறித்தும் கழிவறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட அலுவலர்களிடம் விவரங்களையும், வழக்கு குறித்த தகவல்களையும் கேட்டறிந்த அவர், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி உள்ளிட்ட நீதிபதிகளிடம் வலியுறுத்தினார்.

Views: - 50

0

0