வரும் 20ந் தேதி தருமபுரி வரும் முதல்வர்: முன்னேற்பாடுகளை பார்வையிட்ட அன்பழகன்

18 August 2020, 11:06 pm
Quick Share

தருமபுரி: வருகிற 20 ந் தேதி தமிழக முதல்வர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்து கலந்தாய் கூட்டத்தல் பங்கேற்க உள்ளார். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் பார்வையிட்டார்.

தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகிற 20 ந் தேதி நடைபெற உள்ள புதிய திட்டபணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட திட்ட பணிகள் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழல் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவாசாய பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினருடன் கலந்தாய்வு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இவருடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கலந்து கொண்டார்.

Views: - 28

0

0