விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை

26 September 2020, 7:34 pm
Quick Share

புதுச்சேரி: மத்திய அரசுக்கு எதிராக வரும் 28ஆம் தேதி புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றவுள்ள நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பாக நிறைவேற்றியுள்ள 3மசோதாக்களை திரும்பப்பெறக்கோரி வரும் 28ஆம் தேதி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்து இருந்தார். இந்நிலையில் போராட்டத்தில் விவசாயிகள் பங்கெடுக்கும் வகையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் இன்று மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு விவசாயி பிரதிநிதிகள் கலந்துகொண்டு மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதாக்களுக்கு எதிராக தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர். மேலும் வரும் 28ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொள்ள வேண்டுமென விவசாய பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.

Views: - 4

0

0