திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

15 January 2021, 4:18 pm
Quick Share

புதுச்சேரி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்

திருக்குறளை எழுதி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் திருவள்ளுவர், இவர் எப்போது பிறந்தார் என்பது குறித்து பல வேறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகிறது, ஆனால் திருக்குறள் தந்த திருவள்ளுவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி,

சபாநாயகர் சிவக்கொழுந்து, கல்வி அமைச்சர் கமல கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதே போல் திமுக, அமமுக, பா.ஜ.க, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினரும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Views: - 7

0

0