முதல்வர் தாயார் உருவ படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை

Author: Udayaraman
14 October 2020, 2:13 pm
Quick Share

புதுச்சேரி: தமிழக முதல்வர் தாயார் மறைவையொட்டி அவரது உருவ படத்திற்கு புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

தமிழக முதல்வரும் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசியம்மாள் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இதனையடுத்து புதுச்சேரி அதிமுக சார்பில் இன்று உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் தாயாரின் உருவபடத்திற்கு அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் அதுமுகவினர் மலர்தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களை சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 32

0

0