அரசு பள்ளிகளை புணரமைக்கும் பணியினை தொடங்கி வைத்த முதல்வர்

Author: Udhayakumar Raman
1 September 2021, 2:32 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இரண்டு அரசு பள்ளிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ரூ.7 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

புதுச்சேரியின் புகழ்பெற்ற பள்ளிகளான கலவை கல்லூரி அரசினர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் கடந்த சில வருடங்களாக முன்பு சேதமடைந்ததால் இப்பள்ளி தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வந்தது. இந்நிலையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த இவ்விரு பள்ளிகளையும் பழமை மாறாமல் மீண்டும் புரணமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறெ தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இவ்விரு பள்ளிகளையும் “புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் புணரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ரூ.7 கோடியே 61 லட்சத்தி 77 ஆயிரம் மதிப்பில் பள்ளிகளை புரணரமைக்கும் பணியினை முதல்வர் ரங்கசாமி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லஷ்மிநாராயணன், தலைமைச் செலயர் அஸ்வினி குமார் மற்றும் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

Views: - 119

0

0