குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

15 November 2020, 5:51 pm
Kadamboor Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களின் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து 151 வது பிறந்த தின விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.

குரூஸ் பர்னாந்து 1909 முதல் ஐந்து முறை தூத்துக்குடி நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தூத்துக்குடி நகர மக்கள் சுகாதாரமற்ற கிணற்று நீரை குடிக்கவும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்த நிலையில் தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கையிலிருந்து கப்பல் மூலம் குடிநீர் கொண்டு வந்தார் அதனை தொடர்ந்து கடம்பூரில் இருந்து ரயில் மூலமாக குடிநீரை கொண்டு வந்து வழங்கினார். அதனை தொடர்ந்து கோரம்பள்ளம் குளத்தில் இருந்து குடிநீர் கொண்டு வந்தது மட்டுமன்றி நிரந்தரமாக குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தூத்துக்குடி மாநகர மக்களுக்காக குடிதண்ணீரை தாமிரபரணி ஆற்று படையான வல்லநாட்டில் இருந்து தூத்துக்குடிக்கு கொண்டு வந்தார்.

ஐந்து முறை தூத்துக்குடி நகராட்சி தலைவராக இருந்த அவரது பிறந்த தினத்தை இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து முதன்முதலாக அவருடைய 151 வது பிறந்தநாள் இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சட்டப்பேரவை கொரோனா தொற்று பரவல் காரணமாக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட இறுதி நாளில் அரசு விழா பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது என்ற பெருமையுடன் கூறினார். தொடர்ந்து பேசியவர் குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

Views: - 18

0

0