தாலுகா அலுவலகங்களில் முதலமைச்சர் திடீர் ஆய்வு: மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு

3 November 2020, 5:24 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் முதலமைச்சர் நாராயணசாமி தீடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காலதாமதம் இன்றி உடனடியாக மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக ஜாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ்கள் ஆன் லைன் மூலம் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக மாணவர்கள், பெற்றோர்கள், சமூக அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மற்றும் வில்லியனூர் பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சான்றிதழ்கள் பெற வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் சான்றிதழ் பெறுவது சம்பந்தமாக குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து அங்கிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை விரைவாக வழங்குமாறும் பொதுமக்களை அலை கழிக்க வைக்காமலும், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு வாய்ப்பு அளிக்காமல் தனித்தனியாக சான்றிதழ்களை விரைவாக கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆய்வின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாவட்ட ஆட்சியர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Views: - 19

0

0