மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள முதல்வர் வலியுறுத்தல்

Author: kavin kumar
22 October 2021, 6:56 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, புதுச்சேரி மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட வீடியோவில் முதல்வர் ரங்கசாமி கூறியிருப்பதாவது:- நமது நாடு மக்கள் தொகையில் பெரிய நாடாக இருந்தாலும், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு எடுத்த முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது.புதுச்சேரியில் நூறு சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலைய உருவாக்க வேண்டியது நமது கடமை. அதன் ஒரு அங்கமாக ‘நான் போட்டுக் கொண்டேன், நீங்கள் போட்டுவீட்டீர்களா’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, வரும் 25ம் தேதி தடுப்பூசி திருவிழாவை அரசு நடத்துகிறது. அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்பட்டு, இதுவரை முதல் ஊசி போடாதவர்கள்,

தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும். முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 2வது தவணை தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். நம்மை கொரோனா நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி ஒன்றே பெரிய தடுப்பாக இருக்கும்.அதுமட்டுமின்றி, முககவசம் அவசியம் அணிய வேண்டும். நம் மூலமாக மற்றவர்களுக்கு தொற்றுநோய் வர வேண்டாம் என்ற எண்ணம், நம்மிடம் வர வேண்டும். அந்த எண்ணம் இருந்தால், நிச்சயம் தடுப்பூசி போட்டுக்கொள்வோம். நோயிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோம். இது அரசின் வேண்டுகோள். அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தேவையான தடுப்பூசிகள் உள்ளது. அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Views: - 218

0

0