மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் உயிருடன் குழந்தை மீட்பு

Author: Udayaraman
10 October 2020, 2:21 pm
Quick Share

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் உள்ள பனங்கள் சாலை பகுதியில் நீண்ட நேரமாக குழந்தை ஒன்ற பாத்த அந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் குழந்தையை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தையை வார்டில் அனுமதித்தனர். அதைதொடர்ந்து குழந்தைக்கு மருத்துவக்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு குழந்தையை வீசி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 36

0

0