குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது.. குமரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

19 November 2020, 2:47 pm
Quick Share

கன்னியாகுமரி: குழந்தைகளை ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது என்று குமரி மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குமரி மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;- நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் சிலரின் அதீத பேராசையால் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் எண்ணத்தாலும் ஆன்லைன் சூதாட்ட தளங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களாலும் ஈர்க்கப்பட்டு ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர் .

இதன் விளைவாக பொருளாதார ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்பட்டு முடிவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டால் அமைதியாக இருக்கின்றார்கள் என்ற நோக்கில் அவர்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்று கவனிப்பதில்லை .பெற்றோரின் கவனக்குறைவோ , குழந்தைகளின் விளையாட்டோ எதுவாக இருப்பினும் இழப்பு குடும்பத்திற்கு தான் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது .எனவே ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் உங்கள் குழந்தைகளையும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட அனுமதிக்காதீர் என தமிழக காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது

Views: - 0

0

0