முழு ஊரடங்கிலும் தளர்வுகள் ஏதும் இல்லாமல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்…
16 August 2020, 1:25 pmஅரியலூர்; அரியலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கடை பகுதி குப்பைகள் மற்றும் தெருப்பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளுதல் மற்றும் வீடுகளில் குப்பைகளை வாங்கி தரம் பிரிப்பது என தங்களது அன்றாட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கபடுவதால் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கபட வேண்டும் என்றும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு பொதுமக்களுக்கு தானே தவிர எங்களுக்கு இல்லை என்று அரியலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கடை பகுதி குப்பைகள் மற்றும் தெருப்பகுதிகளில் உள்ள குப்பைகளை அள்ளுதல் மற்றும் வீடுகளில் குப்பைகளை வாங்கி தரம் பிரிப்பது என தங்களது அன்றாட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள் செவியிலர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், வருவாய்துறையினர் என ஏராளமானோர் பணியாற்றினாலும் தூய்மை பணியாளர்களின் பங்கு போற்றுதலுக்குரியது. மேலும் நாமும் வீடுகளில் உள்ள குப்பைகளை தரம்பிரித்து கொடுத்து நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்வோம்.