சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போஸ்கோ சட்டத்தில் கைது…

11 August 2020, 7:17 pm
Quick Share

கோவை: கோவையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன் இவரது மகள் சுந்தர்ராஜன் கூலித்தொழிலாளி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சுந்தர்ராஜன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆர்எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வந்தனர் நேற்று அவரை கைது செய்து சிறுமியை மீட்டனர். சுந்தரராஜன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 6

0

0