13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பு…

5 August 2020, 9:16 pm
Quick Share

கோவை: கோவையில் ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பேரை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வெளியில் செல்லலாம் என கூறி சிறுமியை அழைத்துக்கொண்டு கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு ஏற்கனவே காத்திருந்த சந்தோஷின் நண்பன் சதீஷ் என்பவனுடன் சேர்ந்து சந்தோஷ் அச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அச்சிறுமி புகார் அளித்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளான சந்தோஷ் மற்றும் சதீஷ் இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.