7 மாதங்களாக அவதிப்பட்டு வரும் யானை… கண்காணிக்க மருத்துகுழு அமைத்த வனத்துறை

12 September 2020, 10:27 pm
Quick Share

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் 7 ஏழு மாதங்களாக காலில் காயத்துடன் நடமாடி வரும் ஆண் யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை சார்பில் பணி மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காப்புக்காடு பகுதியில் இடது முன்னங்கால் வீக்கமைடைந்து நடப்பதற்கு சிரமத்துடன் இருந்து ஆண் யானையை வனத்துறையினர் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடித்தனர். தொடர்ந்து வனப்பகுதியில் சுற்றி வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் யானையின் காலில் உள்ள காயத்தை தூரத்தில் இருந்தே பரிசோதித்து மருந்து, மாத்திரைகளைப் பொடி செய்து உணவு உருண்டை பழங்களுக்குள் வெயிட் யானை நடமாடும் பகுதிகளில் வைத்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் யானை நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டது.

தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதியும் சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த யானை குன்னூர் ஆற்றுப் பகுதிக்கு வந்திருப்பது அறிந்து மே 11ஆம் தேதி அங்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வன செயலகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி வெளியிள்ள குன்னூர் ஆற்றுப் கரை ஒரத்தில் இருந்து சேற்றில் சிக்கி கடந்த 5 ஆம் தேதி படுத்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து கால்நடை அலுவலர் மருத்துவர் சுகுமர் வனத்துறையினர் யானையை சேற்றில் இருந்து மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கோவைகால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் (ஒய்வு) மருத்துவர் மனோகரன், உதவி வன பாதுகாவலர் தினேஷ் குமார் ஆகியோர் யானை இருக்கும் நெல்லித்துறை வனப்பகுதியில் சென்று தொடர்ந்து கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி கண்காணித்தனர்.

அப்போது யானை நன்றாக உணவு எடுத்து வருவதும் நடக்கும்போது ஒரு கால் லேசாக சிரமப்பட்டு நடப்பதும் தெரியவந்துள்ளது. மற்ற யானை உடல்நிலையும் நன்றாக இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் யானையின் நோய்த் தன்மையைக் கண்டறிய அதற்கு மருந்து செலுத்து கட்டுக்குள் கொண்டுவந்து காயத்தினை ஆய்வு செய்ய வனக்கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்து செலுத்து யானை கட்டுக்குள் கொண்டுவந்து சிகிச்சை அளிப்பதற்கு உரிய அனுமதி தலைமை வன உயிரினக் காப்பாளர், சென்னை அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அதற்க்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் யானை மருந்து செலுத்து கட்டுக்குள் கொண்டு வந்து சிகிச்சை மேற்கொள்ள வன கால்நடை மருத்துவர் திரு டி சுகுமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0