கோவை மாணவியின் மரணத்திற்கு நீட் சாயம் பூசும் திமுக: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் குற்றச்சாட்டு…

19 August 2020, 9:54 pm
Quick Share

கோவை: கோவையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த 19 வயது மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், எவ்வித விசாரணையுமின்றி மாணவியின் மரணத்திற்கு திமுகவினர் நீட் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக பாதித்தாலும் மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கையால் இந்தியாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். எதிர்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் தேவையற்ற விதத்தில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அறிக்கை விட்டு வருவதாகவும்,

நோயை வைத்து அர்சியல் செய்வதாகவும் குற்றம் சாட்டிய அவர்,கோவையில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சூழலில் என்ன காரணம் என்றே தெரியாமல் அதற்கு திமுகவினர் நீட் சாயம் பூசி வருவதாகவும், ஏற்கனவே அனிதா மரணத்தின் போது பல போராட்டங்களை நடத்திய திமுகவினர் நீட் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் பேசவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் ஸ்டெர்லைட் தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும், அதனால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு யார் பொறுப்பு என அதற்காக போராடிய கட்சியினர் கூற வேண்டும் என தெரிவித்ததுடன், ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டி விகிதத்தை மேலும் நான்கு மாதத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Views: - 22

0

0