மின்சாரம் தாக்கி குளிர்பான நிறுவன உரிமையாளர் சாவு…

Author: kavin kumar
10 October 2021, 4:57 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே குளிர்பான கம்பெனி உரிமையாளர் மின்சாரம் தாக்கி உயிரிந்த சம்பவம் குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேலேரி கூட்டு சாலை அருகே வசித்து வருபவர் சரவணன் வயது-45இவர் அதே கிராமத்தில் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்நிலையில்குளிர்பானக் கம்பெனியில் உள்ள மோட்டார் இயக்க சுவிட்டை சரவணன் போட்டுள்ளார்அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. அப்போது கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த அவருடைய சகோதரர் வினோத்குமார் சுவிட்சை நிறுத்திவிட்டு மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில்,

இருந்த சரவணனை அவருடைய சகோதரர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணனுக்கு புஷ்பா என்ற மனைவியும் நவநீதம், அஸ் விவிதர்,என்ற 2 மகன்களும் உள்ளனர். திடீரென குளிர்பான கம்பெனி உரிமையாளர் மின்சாரம் தாக்கி உயிரிந்ததால் மேலேரி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த கிராமம மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Views: - 91

0

0