தற்காலிக சந்தையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

6 August 2020, 4:28 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள தற்காலிக சந்தையில் ஆட்சியர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்று காரணமாக காஞ்சிபுரம் ராஜாஜி மார்கெட் வையாவூர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வந்தது. மழை நீர் தேங்கி சேறும் சகதியாக மாறியதால் வையாவூர் சந்தை பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு சொந்தமான மைதானத்திற்க்கு மாற்றப்பட்டது. இந்த தற்காலிக மார்கெட்டில் 146 கடைகள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. மார்கெட்டில் ஒரு பகுதியில் மட்டுமே நுழைவு வழி இருப்பதால் இந்த மார்கெட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வியாபாரம் இல்லாமல் அவதிபடுவதாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதனால் இந்த தற்காலிக மார்கெட்டில் இரு புறம் நுழைவு வாயில் இருந்தால் அதிக பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வருவார்கள் எனவே இருபுறம் நுழைவு ஏற்படுத்தி தர கோரிக்கை வைத்தனர்.

மேலும் இந்த தற்காலிக மார்கெட்டில் கழிப்பறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு கிருமிநாசினி தெளித்த பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர். காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தற்காலிக சந்தையில் ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்த போது சார் ஆட்சியர் சரவணன், காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.