பேருந்து நிலையம் மற்றும் காய்கறி, பழ அங்காடியில் ஆட்சியர் ஆய்வு

21 June 2021, 2:31 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் காய்கறி பழ அங்காடியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி திருத்தணி ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பேருந்து பணி மனைகளில் இருந்து தமிழக அரசு நான்கு மாவட்டங்களுக்கு அளித்துள்ள தகவலின்படி பேருந்து சேவை காலை முதல் துவங்கியது. தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே பேருந்து பயணிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பேருந்துகளில் பயணித்தனர். இதனிடையே திருவள்ளூர் நகரில் உள்ள திரு.வி.கல்யாண சுந்தரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார். பேருந்துகளில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றும், ஓட்டுனர் நடத்துனர்கள் பயணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் அங்குள்ள நகராட்சி கழிப்பறை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து வடக்கு ராஜவீதி காய்கறி அங்காடி உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், காய்கறி மற்றும் மளிகை பொருட்களை நியாயமான விலைக்கு விற்கும்படி வணிகர்களை கேட்டுக்கொண்டார். மேலும் காய்கறி மார்க்கெட் பகுதியில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். மார்க்கெட் பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் சுகாதாரமான முறையில் மார்க்கெட் பகுதியை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூரில் 120 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ஆட்சியர், கடைகளில் விற்கப்படும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலையை உயர்த்தி விற்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் வருவதாகவும், வணிகர்களை நியாயமான விலைக்கு விற்க வேண்டும் என வலியுறுத்திய ஆட்சியர், தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் பணம் வசூலிக்கும் போது கூடுதல் பெட்டி வசூலிப்பதாக எழுந்த புகாரின் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

அண்டை மாவட்டங்களில் இருந்து வாகனங்களின் மூலம் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்வதாக புகார் எழுந்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்த அவர், தளர்வுகள் அரசு அறிவித்த போதிலும் பொதுமக்கள் அதை முறையாக கடைபிடித்து முகக்கவசம் அணிந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 85

0

0