அரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு

Author: Udayaraman
27 July 2021, 6:27 pm
Quick Share

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான கச்சனம், ஆண்டகரை, விளக்குடி, பாமணி, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் புதிய கட்டிடங்களையும், கிராமப்புற பொதுமக்களுக்கு ஆட்டுக் கொட்டகை தொகுப்பு வீடுகள் மற்றும் இணைப்பு பாலங்கள் உள்ளிட்டவை அரசால் அரசால் வழங்கப்பட்டு வேலை நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கச்சனம் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது தேனீர் கடைகளில் முகக்கவசம் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமென துறை சார்ந்த அதிகாரிகளிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் அனைத்து பகுதி ஊராட்சி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Views: - 96

0

0