பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

Author: Udhayakumar Raman
27 October 2021, 6:00 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தினார்

நவம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் தங்களுடைய மாணவர்களுக்கு போக்குவரத்திற்கு சொந்தப் பேருந்துகளை பயன்படுத்தி வரும் நிலையில் விருதுநகர் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் பேருந்துகளை இன்று மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆய்வு நடத்தினார். விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் கல்வி வட்டாரங்களுக்கு உட்பட்ட 76 பள்ளிகளுக்கு சொந்தமான சுமார் 369 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வில் பேருந்தின் பிரேக் தீயணைப்பான் கருவி ஆபத்து காலங்களில் வெளியேறும் பகுதி (எமர்ஜன்ஸி எக்ஸிட்) சிசிடிவி கேமரா பேருந்துகளின் படிகள் உள்ளிட்ட 13 அம்சங்கள் குறித்து பள்ளி பேருந்துகள் ஆய்வு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பேருந்தின் தரம் குறித்து ஆய்வு நடத்தினார்.

Views: - 99

0

0