மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஆட்சியர் நேரில் ஆய்வு

Author: Udhayakumar Raman
19 September 2021, 4:57 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று 250 இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் இரண்டாவது சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தடுப்பூசி முகாம் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு வருகின்றனர். தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர், உள்ளிடட இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த முகாமில் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற துறை பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று தருமபுரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு முகாமில் தருமபுரி மாவட்டத்தில் 49 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 118

0

0