குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிய ஆட்சியர் கதிரவன்

26 January 2021, 3:27 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றினார்.

இந்திய நாட்டின் 72 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோட்டில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் மூவர்ண பலூன்களை மாவட்ட ஆட்சியர் கதிரவன், காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் பறக்கவிட்டனர்.

இதனைதொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர், தீயணைப்பு வீரர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் இந்தாண்டு கொரோனா கட்டுப்பாட்டால் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தியாகிகளின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

Views: - 4

0

0