வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் தலைமையில்ஆய்வு கூட்டம்

4 November 2020, 7:47 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தலைமையில்ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியார்அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கலூரி மருத்துவமனை, ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை, 3 வட்டார மருத்துவமனைகள், ஒரு தொழுநோய் மருத்துவமனை, 9 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 41 கூடுதல் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், ஒன்று நகர ஆரம்ப சுகாதார நிலையம், 225 துணை ஆரம்ப சுகாதாரநிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சுகாதார சேவைகள் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

Views: - 18

0

0