சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பிரபல ஜவுளி கடைக்கு சீல் வைக்க ஆட்சியர் உத்தரவு.

6 August 2020, 5:46 pm
Quick Share

அரியலூர்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பிரபல ஜவுளி கடைக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடைகள் வணிக வளாகங்களில் பணியாற்றக்கூடிய மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், இதனை பின்பற்றாத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மற்றும் முறையாக முக கவசம் அணியாமல் ஏராளமானோர் ஒன்று கூடியுள்ளனர். அப்போது அவ்வழியாக ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ரத்னா சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஜவுளி கடைக்கு சீல் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார், ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் ஆகியோர் ஜவுளி கடைக்கு சீல் வைத்தனர். மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் கடைபிடிக்காத கடைகள் சீல் வைக்கப்படும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Views: - 1

0

0