தனியார் காலணி தொழிற்சாலைக்கு வருவாய் துறையினர் சீல்

9 August 2020, 5:27 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே முழு ஊரடங்கு மீறி இயங்கி வந்த தனியார் காலணி தொழிற்சாலைக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் தனியார் காலணி (மெர்குறி ஷு கம்பனி) தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அரசின் உத்தரவு மீறி பணியாட்களை கொண்டு தொழிற்சாலை இயங்கி வந்ததால் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் உத்தரவி பேரில் ஆலங்காயம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் பிரசாத் தலைமையிலான வருவாய் துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 7

0

0