வெண்கல பதக்கம் வென்ற 3 மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கிய ஆட்சியர்

6 November 2020, 5:25 pm
Quick Share

பெரம்பலூர்: 64 வது தேசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற 3 மாணவிகளுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 3 லட்சம் பரிசு தொகையினை மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 64 வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பவானி, கிருத்திகா, மற்றும் சபீதா ஆகியோர் வெண்கல பதக்கங்களை பெற்றனர். வெண்கல பதக்கம் பெற்ற மூன்று மாணவிகளுக்கு ரூ 1 லட்சம் வீதம் ரூ 3 லட்சம் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் , மற்றும் விளையாட்டு விடுதி மேலாளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 17

0

0