கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சார் ஆட்சியர் ஆய்வு

18 September 2020, 5:47 pm
Quick Share

தருமபுரி: மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சார் ஆட்சியர் பிரதாப் முருகன் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் தாசிரஹள்ளியில் நேற்று 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மொரப்பூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சார் ஆட்சியர் பிரதாப் முருகன் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரூர் ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளில் பொது மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்,

வெளிமாநில மற்றும் வெளிமாவங்களில் இருந்து வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், முககவசம் அணிய வேண்டும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பொது மக்களிடம் வலியுறுத்தினார். ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் அரசு, மருத்துவ அலுவலர் வனிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Views: - 1

0

0