ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் பார்வை

Author: kavin kumar
8 October 2021, 4:39 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் ஒன்றியத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்,ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி சங்கராபுரம் ஒன்றியத்தில் காலியாக உள்ள 433 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 363 வார்டு உறுப்பினரில் 27 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.மீதம் 336 ஊரக வார்டு உறுப்பினர் பதவிக்கு 1244 பேர்,44 கிராம ஊராட்சி தலைவரில் இதில் 4 கிராம ஊராட்சி மன்ற தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது .மீதம் 40 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 168 பேர்,24 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 110 பேர்,2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 13 பேர் மொத்தம் 1535 பேர் போட்டியிடுகின்றனர். இவற்றிற்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாக்குப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி ஆணையினையும் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார், மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் சிரமமின்றி கிராமப்புற வாக்குச்சாவடிக்கு செல்ல முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்அப்பொழுது வட்டார தேர்தல் பார்வையாளர் ராஜாமணி,தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செல்வகுமார்,ரத்தினமாலா, ராஜேந்திரன்,ரவிச்சந்திரன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கொளஞ்சிவேல உடன் இருந்தனர்.

Views: - 93

0

0