கல்லூரி மாணவி மாயம்.! காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா.?

24 February 2021, 10:13 pm
Quick Share

கன்னியாகுமரி: குலசேகரம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

குமரிமாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னகுமாரி(42). இவரது மகள் பிரியதர்ஷினி( 20 ).இவர் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஒரு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை.மாணவியின் பெற்றோர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .

போலீசார் விசாரணையில் கூறப்படுவதாவது; கல்லூரி மாணவி பிரியதர்ஷினி மணலோடை பகுதியை பெர்லின் (24 ).என்பவரை பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். நேற்று கல்லூரியை முடித்து விட்டு அந்த வாலிபருடன் சென்றுள்ளார் .இரவில் மாணவி பெற்றோர்களுக்கு போன் செய்து தான் பெர்லின் என்ற வாலிபரை கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். நாங்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொள்ள போகிறோம் .என்னை தேட வேண்டாம் என செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு,அழைப்பை துண்டித்துள்ளார். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறினர்.

Views: - 3

0

0