அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விதிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம்

5 February 2021, 5:21 pm
Quick Share

ஈரோடு: பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விதிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ,மாணவியர்கள் கல்லூரியின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனையை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார துறையில் கீழ் இயங்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 500- க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கபட்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான 4- லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வசூலிக்கபடுவதாகவும்,

அரசு கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 600- ரூபாயை கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ,மாணவியர்கள் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி 100- க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்லூரியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கல்வி கட்டணத்தை குறைத்து உத்தரவு வழங்கும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 17

0

0