உலக இருதய தினம்: PSG மருத்துவமனையில் ஒருங்கிணைந்த இருதய மையம் துவக்கம்..!!

Author: Aarthi Sivakumar
29 September 2021, 6:38 pm
Quick Share

கோவை: உலக இருதய தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த இருதய மையம் துவங்கப்பட்டுள்ளது

இருதய நோய்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இருதயத் துறை சார்பில் பியர்ல் கிளினிக் எனும் இருதயத்திற்கான ஒருங்கிணைந்த மையம் துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை இருதயத்துறை துறைத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் புதிய பியர்ல் கிளினிக் குறித்து பேசினார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் புதிய கிளினிக்கை துவக்கி வைத்தார். இந்த இருதய மைய துவக்க விழாவில் டாக்டர் ராம மூர்த்தி,ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா துணை பொது மேலாளர் திலீப் சிங் யாதவ், பஜாஜ் பின்சர்வ் தேசிய விற்பனை மேலாளர் சுனீஷ் சுப்பிரமணியன், பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் ஜே.எஸ்.புவனேஸ்வரன், பி.எஸ்.ஜி மருத்துவமனை முதல்வர் சுபா ராவ், மத்திய அதிரடிப் படை துணை கமாண்டன்ட் மருத்து அதிகாரி அனுத்தமா பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்மையத்தின் மூலம் ஓய்வின்றி இயங்கும் இருதயத்தை பாதுகாக்கவும், நோய் வராமல் தடுக்கவும் பல்வேறு இருதய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.மேலும் இருதய ஒருங்கிணைந்த மையம் பற்றிய விவரங்களுக்கு 9894097730 என்ற எண்களை அழைத்து தெரிந்து கொள்ளலாம் என பி.எஸ்.ஜி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Views: - 226

0

0